|

பேரரசர் அவதார திரு நாள் -1350 ,மாநில அளவில் கொண்டாட அரசாணை வேண்டும்

Feb 28, 2025

ஓம் நமச்சிவாய !

பேரரசர் அவதார திருநாளை  மாநில அளவில் ,அரசு விழாவாக கொண்டாட ,திராவிட மாடல் அரசாணை பிறப்பிக்கின்றதா ?

தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்ட வேந்தர்....

அகண்ட பாரத வரலாற்றில் போருக்கு செல்லும் போதே ,வாகைப்பூ சூடிச் சென்று 16 க்கும் மேற்பட்ட போரில் வெற்றி வாகை சூடியவர்......

திரு நியமத்தில் கொற்றவை மாகாளத்து காளா பிடாரிக்கு கோட்டை வடிவில் ஆலயம் அமைத்து,அங்கு 1008 லிங்கங்களை அமைத்து வணங்கியவர்......

தமிழுக்கும்,தமிழ் சமூகத்திற்க்கும் சமய நல்லிணக்கத்தோடு ,அறவழியில் ஆட்சி செய்தவர்.......

கோட்டைகள்,குடைவரைகள் ,ஆலயங்கள்,சிற்பக்கலை, கட்டக்கலைகளில் தனித்த முத்திரை படைத்த முத்தரையர் பேரரசின் அடையாளம்......

நீர் மேலாண்மையின் முன்னோடி அரசு - முத்தரையர் பேரரசு.....

நாலடியார் போற்றி வணங்கிய முத்தரையர் பேரரசின் அடையாளம்.....

சக்கரவர்த்தி காரிகாலனின் வம்சத்தில் உதித்த பேரரசர்,தமிழ்த்தாயின் தலைமகன் ,அப்பெருவேந்தனின் அவதார திரு நாளை மாநில அளவில் அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறோம்......!

வாழ்க தமிழ் ! 

போற்றுவோம் தமிழக மன்னர்களின் அறத்தின் ஆட்சியை....!

காப்போம் தமிழர் மாண்பினை !

பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் முத்தரையர் இலக்கிய வட்டம் ,திருச்சிராப்பள்ளி.

www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us