திருவரங்கத்தில் வேடுபறி
Dec 21, 2021
திருச்சிராப்பள்ளி மாவட்ட கெசட்ல் ஸ்ரீரங்கம் வேடுபறி விழா பற்றிய குறிப்புகள் :
#ஸ்ரீரங்கம்_கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகமுக்கியமான பிரசிதிபெற்ற மற்றும் பிரபலமான திருவிழா "#வேடுபறி_திருவிழா" ஆகும். இத்திருவிழா வைபவம் ஆனது வருடம் தோறும் மார்கழி மாதம் தொடர்சியாக இருபது நாள் நடைபெறும் (இராப் பத்து மற்றும் பகல் பத்து). இராப் பத்து(இரவு பத்து நாள் விழா) திருவிழாவின் போது எட்டாம் நாள் மாலையில் வேடுபறி விழா ஆனது #திருமங்கை_ஆழ்வாரின் நினைவாக மிக பிரம்மாண்டமான முறையில் அவர் எழுப்பிய #முத்தரசன்குறடில்(முத்தரசன் குறடு என்பது திருமங்கை ஆழ்வாராள் கட்டப்பட்ட ஆயிரம் கால் மண்டபம் ஆகும்) திருமங்கை ஆழ்வாரின் பரம்பரையில் வந்தவரும் அப்பகுதி முத்தரையர்களின் தலைமையாக இருப்பவரும் உயர்திரு.#பெரியண்ணன்_முத்துராஜா அவர்களின் தலைமையில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிகளால் இவ்விழா நடைபெறுகின்றது.
உயர்திரு.பெரியண்ணன் முத்துராஜா அவர்களை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மேளதாளம் தாரை தப்பட்டை இசை முழங்க மற்றும் வான வேடிக்கை உடன் ஊர்வளமாக கோவிலுக்கு அழைத்து வந்து கோவிலில் "முதல் மரியாதையான பரிவட்டம்" அவருக்கு கோவில் நிர்வாகத்தால் கட்டப்படுகின்றனது.
இந்த விழாவிற்காக "ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கனாதர் சுவாமிகள்" ஒரு நாள் முழுவதும் கீழவாசல் அருகே உள்ள தங்கையா முத்தரையர் தோப்பில் அமைந்துள்ள முத்தரையர் மண்டகப்படியில் காட்சி அளிப்பார்.
????????????????????????அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி????????????????????