குன்றாண்டார் கோயில் வரலாற்றில் இளஞ்சிங்க முத்தரையர்
Mar 17, 2025
குன்னண்டார்கோவில் அரையர் கல்வெட்டுகள் !
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் கீரனூரிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் குன்றாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு கி.பி.775 ஆண்டில் முத்தரையர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்(சிவன்கோயில்) அமைந்துள்ளது.
இக்கோவில் திருக்குன்றக்குடி உடைய நாயனர் கோவில் என்று கல்வெட்டுகள் கூறுகிறது.இக்கோவில் பல காலகட்டத்தில் பலரும் திருப்பணி செய்துள்ளனர்.
இக்கோவில் அர்த்தமண்டப தூண்கள் அரையர் என்ற முத்தரையர்கள் தானம் செய்துள்ளனர்.
அக்கல்வெட்டுகள் கீழே,
1.பெரும்புலியூர்
2.பிள்ளான்
3 திருத்தான்
4.தன்மம்
பெரும்புலியூரில் உள்ள பிள்ளான்,திருத்தான் என்பவர்கள் தானமாக கொடுத்துள்ளனர்.(பு.க-1099)
1.இக்கால் பெரும்
2.புலியூர் வியா
3.பாரி செகல் உ
4.டையான் செ
5.அம்பலவன
6.ந் தாண்டான்
7.தன்மம்.
பெரும்புலியூரில் உள்ள வியாபாரி "அம்பலவானன்" தன்மம். அம்பலம்,அம்பலகாரர் ,அம்பலவானன் என முத்தரையர்களை குறிக்கும்.(பு.க-1100)
1.துவரங்கோ
2.ட்டை அரை
3.யர்களி
4.ல் பொன்
6.னதுன்
7.டராயன்
8.தன்மம்
துவரங்கோட்டை அரையர்களில்(முத்தரையர்களில்) பொன்னதுன்டராயன் என்பவர் தூண் தானமாக கொடுத்துள்ளார்.(பு.க 1101)
1.ஸ்வத்தி ஸ்ரீ
2.பெரும்புலி
3.யூர் அரையர்க
4.ளில் காத்தா
5.னான ராரா
6. முத்தரைய
7.ன் தன்மம்
பெரும்புலியூர் முத்தரையரில் காத்தான் என்ற ராரா முத்தரையன் தானமாக கொடுத்துள்ளார்.மேலும் இந்த ராரா முத்தரையன் பெயரில் ராரா புறம் என்ற ஊர் இன்றளவும் உள்ளது.(பு.க-1102)
1.இக்கால் தெற்
2.றியூர் உடை
3.யான் எழுவன்
4.குன்றன் பாலை
5.யூர் நாடாழ்வா
6.ன் மகன் கை
7.யிலாண்டான்
8.தன்மம் .
தெற்றியூர் உடையான் எழுவன் குன்றம் பாலையூர் நாடாழ்வான்(அரையன்)
மகன் கையிலாண்டான் தானமாக கொடுத்துள்ளார்.(பு.க- 1103)
1.இக்கால்கள்
2.நல்லூரில்
3.இளஞ்சிங்க
4.பேரையர்
5.மக்கள் அர
6.சவண்டரு
7.ம் செயான்
8.பொன்ன
9.னும் சோ
10.ழன்காரியு
11.ம்தன்மம்
நல்லூரில் இளஞ்சிங்கப் பேரரையர் அரசாண்டவரும் சேயான் பொன்னனும்,சோழன் காரியும் தூண் தானமாக கொடுத்துள்ளனர்.இளஞ்சிங்க முத்தரையன் என குறிக்கும் கல்வெட்டு பேரையூர் அருகே உள்ளது.(பு.க-1104)
1.துவரங்
2.கோட்டை
3.அரை
4.யர்களில்
5.இளங்க
6.தரையந்
7.மகன் பி
8.பிள்ளாண்
9.டான் தன்மம்
துவரங்கோட்டை முத்தரையரில் இளஞ்சிங்க அரையன் மகன் பிள்ளாண்டன் தூண் தானமாக கொடுத்துள்ளார்.(பு.க-1105)
புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தரையர், அரையர்,அரையன்,முத்திரியன்,முத்திரி,
அம்பலம்,அம்பலகாரர்,சேர்வை என முத்தரையர் பெருங்குடி மக்கள் வாழ்ந்துள்ளனர்.
நன்றி...
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்