|

குடும்ப உறவில் நவக்கிரகம்

Mar 25, 2025

*9 நவகிரகங்கள் குறிக்கும்* *குடும்ப உறவுகள்*!

நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு 
சில நேரங்ங்களில்,
கஷ்டப் படுவதற்கு 
என்ன காரணம்,
என்கிற உண்மையை 
நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்! 

இது கூடவா, ஒரு காரணம் என்ற அளவிற்கு இந்த பதிவு உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும், 

அந்த காரணம் என்ன?

தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?

என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

1)எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,

அவர்களுக்கு நவகிரகங்களின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் *கட்டாயம் கிடைக்கவே* *கிடைக்காது.*

இப்படியாக சொன்னால் 
நீங்கள் நம்புவீர்களா? 

நம்ப மாட்டீங்கன்னு தெரியும்!.

*சாட்சியோடு சொன்னா நம்புறீங்களான்னு பார்ப்போம்*

ஒவ்வொரு கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் இந்த பதிவில் பார்த்துவிடலாம்

1)*உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,*

அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,

உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.

வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். 

சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.

ஏனென்றால், *அப்பா* *ஸ்தானத்தை குறிப்பது* *சூரியன்.*

2)*உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால்,*

அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,

அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,

கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.

அறிவாற்றல் மங்கிப் போகும்.

குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.

மனநிம்மதியே இருக்காது. 

ஏனென்றால், *அம்மா *ஸ்தானத்தை குறிப்பது* *சந்திரபகவான்.*

3)*நீங்கள் கணவனாக* *இருந்தால்,*
உங்களுடைய மனைவியை மரியாதையோடு தான் 
நடத்த வேண்டும்.

மனைவிக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால்,

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக இல்லை. 

வீடு, மனை, வாகனம், சொத்து,பத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும். 

ஏனென்றால்*மனைவி*
*ஸ்தானத்தை குறிப்பது* *சுக்கிரன்.*

4)*நீங்கள் மனைவியாக* *இருந்தால்* உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். 

*உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.*

ஏனென்றால் உங்கள் *கணவர்* *ஸ்தானத்தை குறிப்பது* *குரு*

5)உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன், அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.

ஏனென்றால்
*தாய்மாமன் ஸ்தானத்தை* *குறிப்பவர்**புதன்* *தாய்மாமன் மட்டுமல்ல*
*அத்தை ஸ்தானத்தை* குறிப்பதும் புதன் பகவான்தான்.

6)*அண்ணன், மச்சான்* *பெரியப்பா ஸ்தானத்தை* *குறிப்பவர் சனி பகவான்*

நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். 

நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. 

நாள்பட்ட தீராத நோய்கள், முழுமையாக வளர்ச்சி பெறாத உடல், தீராத மனக்கவலை, நரம்பு தளர்வு, இளமையிலேயே முதுமையான முகத்தோற்றம் போன்றவற்றுக்கும் சனி பகவான் தான் காரணமாக இருக்கிறார்.

மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பதற்கும் இவர்தான் காரணம். 

ஆண்- பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்குபவர் சனி தான். 

விகாரமான அல்லது அருவறுப்பு தரக்கூடிய உடல், செம்பட்டையான, அழுக்கு படிந்த,  தலைமுடிக்கும் சனிதான் காரணம் ஆவார்.

எனவே *அண்ணன்*,*மச்சான்* *பெரியப்பா*போன்ற உறவுகளை ஏமாற்றினாலோ,அவர்களை மரியாதை குறைவாக நடத்தினாலோ உங்களுக்கு 
நாள்பட்ட தீராத நோய்கள்,
மலட்டுத் தன்மை,விகாரமான அல்லது அருவறுப்பு தரக்கூடிய உடல்,மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பது போன்ற நிலைகள் ஏற்படும்.

உங்களுக்கு சனி பகவான அனுக்கிரகம் கிடைக்காது

7)*சகோதர சகோதரிகளின்*
*ஸ்தானத்தை குறிப்பவர்* 
*செவ்வாய் பகவான்*

*சகோதர சகோதரிகளை* *இழிவாகப் பேசினால்*அவர்களுக்கு சேர வேண்டிய சொத்தை வஞ்சித்து ஏமாற்றினால் செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது.

இதனால் உங்களால் ஆடம்பர பொருட்கள்,நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி,சேர்க்க முடியாது.வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். 

இது உங்களுடைய எல்லா சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும். 

மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

8&9)*அடுத்ததாக பாட்டிமார்களும்*
*தாத்தாக்களும்**பித்ருக்கள்*
ஸ்தானத்தை குறிப்பவர் ராகு மற்றும் கேது.

இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.

அதாவது, ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.

ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும். 

முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.

*இப்போதாவது நம்புகிறீரகளா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று*!

ஆக மொத்த உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள்  இருந்தாலும்
சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர் 
பார்க்காமல் பேசாமல் இருப்பதை தவிர்த்து அவர்களுடன் அன்புடன்
பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி
அதன்மூலம் நாமும் சந்தோஷமாய் வாழ்வோம்.

 நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்.. 

ஆக 12 கட்டங்களும் 9 கிரஹங்களும் நம்மை சுற்றி 
நம் வீட்டில்தான் உள்ளனர் 
என புரிந்து நடந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் நிச்சயமாய் 
சிவாயநம 🙏🏻 www.araiyarsuvaranmaran.com🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us